ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்… தமிழக அரசின் சூப்பர் திட்டம்.. உடனே விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் உள்ளே..!!

By Soundarya on ஆனி 11, 2026

Spread the love

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிப் பெண்கள் தங்களின் சுயதொழில் தேவைகளுக்காக இலவச தையல் இயந்திரங்களைப் பெற்றுப் பயனடையலாம்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், அங்கீகரிக்கப்பட்ட தையல் பயிற்சி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 6 மாத கால தையல் பயிற்சியை முடித்து அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் வயது 40-க்குள் இருக்க வேண்டும் மற்றும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டியது அவசியமாகும். இவற்றுடன் தகுதியுடைய பெண்கள் கூடுதல் விபரங்களை அறிந்துகொள்ளவும், விண்ணப்பிக்கவும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnsocialwelfare.tn.gov.in என்ற முகவரியை அணுகலாம்.