சென்னை போன்ற மாநகராட்சிகளை சுற்றியுள்ள பெல்ட் ஏரியாக்களில் பட்டா வழங்குவது தொடர்பாக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி முதலில் விண்ணப்பிக்கும் இடம் அரசின் புறம்போக்கு இடமாக இருக்க வேண்டும். அதேசமயம் விண்ணப்பிக்க பாஸ்போர்ட் அளவு போட்டோ, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பட்டா பெற விரும்பும் இடத்தில் 10 ஆண்டுகள் வசித்ததற்கான ஆதாரம் ஆகியவற்றை சமர்ப்பிப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தாலும் நீர் நிலைகள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள் மற்றும் கோயில் நிலங்களில் வசிப்போருக்கு அவர்கள் வசிக்கும் அதே பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்படாது. இருப்பினும் அவர்களை கைவிடாமல் இருக்க, தமிழக அரசு வேறொரு இடத்தில் வீட்டுமனை பட்டாவை வழங்கும்.
