அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் , தேர்தலுக்கு தேதி விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஸ்டாலினின் ஆட்சிக்காலம் இன்னும் மூன்று மாதங்கள் தான். மகளிர் உரிமைத்தொகை முன்பு பகுதி உடையவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று சொன்னார்கள் தற்போது அனைவருக்கும் தருகிறோம் என்கிறார். இத்தனை காலம் செய்யாதவர் தேர்தல் வரவுள்ள காலத்தினால் ஓட்டு வேண்டும் என்றால் அனைத்து திட்டங்களையும் தருவேன் என்று கூறுவார். மேலும் “ஒரு ஆளுக்கு ஒரு பொண்டாட்டி தருவேன்” என்று கூட சொல்வார் என்று சி.வி.சண்முகம் பேசியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இந்த செய்தி முற்றிலும் தவறானது என விளக்கமளித்துள்ளது அதிமுக. விஷமத்தனமான நோக்கத்தோடு அவதூறு பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
