டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது. போட்டி தேர்வுக்கு படிக்கும் நபர்களுக்கு சென்னையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. வாரத்தின் இறுதி நாட்களில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெறும். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து பிரிவு மாணவர்களும் பங்கேற்று பயிற்சி பெறலாம். இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க மாணவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.
பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், குடியிருப்பு முகவரிக்கான ஆதாரங்களுடன் பயிற்சி வகுப்பிற்கு வர வேண்டும். சென்னை-1 பாரிமுனை 6/9, அக்ரஹாரம் சந்து அருகில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் அமைந்துள்ளது. வருகிற நவம்பர் இரண்டாம் தேதி பயிற்சி வகுப்புகள் தொடங்கும். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9:30 மணி முதல் மாலை 4 45 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். 9790610961, 9791285693 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…