தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும், இத்திட்டம் தடையின்றித் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றும் அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று (14.05.2026) அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு வழங்கப்பட்ட ₹0.00 கட்டணமில்லா பயணச் சீட்டுகளின் புகைப்படங்களை அரசு ஆதாரமாக வெளியிட்டுள்ளது. முன்னதாக, அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் வழங்கப்படும் எனத் தவெக வாக்குறுதி அளித்திருந்த பின்னணியில் இத்தகைய வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
