இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில், “வெற்றி நிச்சயம்” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறைகளின் தேவைக்கேற்ப, பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும். தற்போது, “5ஜி கம்யூனிகேஷன்” தொழில்நுட்பத்திற்கான சான்றிதழ் பயிற்சி தொடங்கப்படுகிறது. Cultus என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) இந்த பயிற்சியை வழங்குகிறது. இப்பயிற்சியில் உதவித்தொகை மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படும். இப்பயிற்சி 4000 இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளன. 18 வாரங்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், 70% நேரடி வகுப்பும், 30 % ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும்.
இப்பயிற்சியில் கற்பிக்கப்படும் திறன்கள் பின்வருமாறு,
- RF (ரேடியோ அலை) சிக்னல் பகுப்பாய்வு மற்றும் புரோட்டோகால் பிழைத்திருத்தம்.
- 5G கோர் மற்றும் நெட்வொர்க் வடிவமைப்பு.
- SDR (Software Defined Radio), MATLAB போன்ற கருவிகளைப் பயன்படுத்தி நேரடி சோதனை.
- srsRAN / Open5GS அமைப்புகளைச் செயல்படுத்தி சோதனை செய்தல்.
இந்தப் பயிற்சியை முழுமையாக முடிப்பவர்கள் 5G RAN பொறியாளர், Protocol Stack Developer, RF Testing பொறியாளர்,போன்ற முன்னணி பதவிகளில் பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.
இதில் ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும்.
விண்ணப்பிக்கும் தகுதியுள்ளவர்கள் :
- வயது 18 முதல் 35 வரை இருக்க வேண்டும்
- ECE, EEE, CSE ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள்.
சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களில் இந்த இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள், https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/41 என்ற வெப்சைட் மூலம் விண்ணப்பிக்கலாம்.
