“சாப்பாட்டு மேஜையில் உல்லாசம்… காட்டிக்கொடுத்த சீடர்கள்…” பெண் உதவியாளருடன் கைது செய்யப்பட்ட ஃபிரா வஜிராயன்… சிசிடிவியில் சிக்கிய அந்தரங்க லீலைகள்…!!

By Devi Ramu on புரட்டாதி 12, 2026

Spread the love

மத்திய தாய்லாந்தின் அயுத்தாயா பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘வாட் புத்தைசவான்’ என்ற பௌத்த மடாலயத்தின் தலைமைத் துறவியாகப் பணியாற்றி வந்தவர் ஃபிரா வஜிராயன் (66). இவர் ஆன்மீகத் தாயத்துக்களை உருவாக்கி புகழ்பெற்றவர். இந்நிலையில், மடத்திற்குச் சொந்தமான சுமார் 100 மில்லியன் பாட் தாய்லாந்து பணத்தை இவர் கையாடல் செய்ததாகக் கடுமையான புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து மத்திய புலனாய்வுப் பிரிவு போலிஸார் நடத்திய அதிரடி சோதனையில், துறவியின் அறையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் கைப்பற்றப்பட்டன. அதில், சாப்பாட்டு மேஜை மீது வைத்து தனது 47 வயது பெண் உதவியாளரான புன்யவீ என்பவருடன் துறவி உல்லாசமாக இருந்த அதிர்ச்சி காட்சிகள் பதிவாகியிருந்தன. கோயில் நிதியைத் தவறாகப் பயன்படுத்தி, அதைத் தனது பெண் உதவியாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றி சொத்துக்களைக் குவித்து வந்ததும் தெரியவந்தது.

   

துறவியின் லீலைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவரது சொந்த சீடர்களே இந்த பாலியல் வீடியோக்களை போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பெண் உதவியாளரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கிலோ கணக்கிலான தங்கத் தாயத்துக்கள், தங்கக் கட்டிகள் மற்றும் கோடிக்கணக்கான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து துறவற ஆடைகள் களையப்பட்டு அந்த போலி சாமியார் மற்றும் அவரது பெண் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.