‘ஆபரேஷன் டைகர்’… ஊருக்குள் பட்டப்பகலில் 4 புலிகள் உலா… விவசாயி மீது வெறித்தனமான தாக்குதல்… நடுக்கத்தில் கிராம மக்கள்… வைரலாகும் ட்ரோன் காட்சிகள்…!!

By Gayathri on கார்த்திகை 5, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள அகலா கிராமப் பகுதியில், ஒரே இடத்தில் நான்கு புலிகள் நடமாடுவது அங்கு பறக்கவிடப்பட்ட ட்ரோன் கேமரா மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் புலிகள் தாக்கியதில் காயமடைந்ததைத் தொடர்ந்து, கிராம மக்களிடையே கடும் அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது. மனித-விலங்கு மோதலைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனத்துறையினர் உடனடியாக அப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

கிராம எல்லைக்குள் உலா வரும் அந்த நான்கு புலிகளையும் கூண்டு வைத்து பத்திரமாகப் பிடிப்பதற்கான விரிவான கள நடவடிக்கைகளை வனத்துறை தொடங்கியுள்ளது. புலிகள் நடமாட்டம் உள்ள குறிப்பிட்ட பாதைகளைக் கண்டறிந்து, கால்நடை மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், புலிகள் சிக்கும் வரை கிராம மக்கள் தனிமையில் விவசாய நிலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.