அடக்கடவுளே இப்படியா நடக்கணும்?… கூகுள் மேப்பால் நடந்த விபரீதம்… 4 பேர் பரிதாபமாக பலியான சோகம்…!

By Divyamayakannan on ஆவணி 28, 2025

Spread the love

ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணத்தினால் பல்வேறு ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  ஜெய்ப்பூரை சேர்ந்த 9 பேர் கொண்ட குடும்பத்தினர் நேற்று ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊருக்கு நேற்று இரவு திரும்பி உள்ளனர். வேன் டிரைவர் கூகுள் மேப்பை பார்த்து வேனை இயக்கியுள்ளார் . வேனில் இருந்த அனைவரும் தூங்கிக் கொண்டு வந்துள்ளனர். வேன் சொமி உப்ரிடா பாலத்தில் சென்றுள்ளது, அப்பாலதில்  கடந்த சில மாதங்களாகவே பராமரிப்பு பணி நடந்து வருகிறது

இது தெரியாத வேன் டிரைவர் பாலத்தின் மீது வேனை ஒட்டியதால் திடீரென்று பனாஸ் ஆற்றுக்குள் பாய்ந்தது. குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 5 பேர் உயிர் தப்பினர். உயிர்பிழைவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.