வங்கதேச நாட்டின் ரங்க்பூர் பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியரான கணபதி சக்ரவர்த்தி, தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 21-ஆம் தேதி நள்ளிரவு வீட்டின் மாடியில் சத்தம் கேட்டு டார்ச் லைட்டுடன் சென்று பார்த்தபோது, அங்கு இருவர் ‘யாபா’ என்ற வீரியமிக்க போதைப்பொருளைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டுள்ளார்.
அவர்களைத் தட்டிக்கேட்ட ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தியை அக்கும்பல் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொன்றது. சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி பிரிதிலதா, 23 வயது மகள் அகமி மற்றும் 12 வயது மகன் பிரியமுத் ஆகிய நால்வரையும் துரத்தித் துரத்தி வெட்டிக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளனர். பின்னர் 4 பேரின் முகங்களிலும் ரசாயனத்தை ஊற்றி சிதைத்த அக்கும்பல், வீட்டில் இருந்த உணவை நிதானமாகச் சாப்பிட்டுவிட்டு, கொள்ளை நாடகமாடுவதற்காக நகை மற்றும் பொருட்களைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடியது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ரங்க்பூர் பெருநகரக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி சித்தார்த்த தாஸ் மற்றும் முக்தா தாஸ் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்து குடும்பத்திற்கு நேர்ந்த இக்கொடூரம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…