குஷியோ குஷி… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை… அரசு சூப்பர் அறிவிப்பு….!

By Nanthini on ஐப்பசி 11, 2026

Spread the love

இந்த மாதம் பள்ளிகளுக்கு நான்கு நாள்கள் தொடர் விடுமுறை வருவதால் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். வரும் 19-ஆம் தேதி திங்கட்கிழமை ஆயுத பூஜையும், 20-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விஜயதசமியும் கொண்டாடப்படுவதால் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முந்தைய வார இறுதி நாள்களான அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன் இந்த விடுமுறை இணைந்து வருவதால் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து நான்கு நாள்கள் விடுமுறை கிடைக்கிறது.

இந்த நீண்ட விடுமுறையை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் வகையில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளவும், பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களை முன்கூட்டியே திட்டமிடவும் இது அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது.