“பயமா இருக்கு… அம்மாவும் 4 வருஷமா அவருடன் சேர்ந்து…” வீட்டை விட்டு ஓடிய சிறுமி… வளர்ப்பு தந்தையால் நடந்த கொடுமை… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 6, 2026

Spread the love

நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த 3-ஆம் தேதி ‘சைல்டு ஹெல்ப் லைன்’ மையத்திற்குத் தகவல் கிடைத்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த கொலக்கொம்பை காவல்துறையினர், சிறுமியைத் தேடி மீட்டு உதகை குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர். அங்குச் சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல நெஞ்சை உலுக்கும் உண்மைகள் வெளியாயின.

சிறுமியின் தந்தை பிரிந்து சென்ற நிலையில், தாய் ராணி (47) என்பவர் நடராஜ் (55) என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு பள்ளி விடுமுறையின் போது நடராஜ் அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கியுள்ளார். இது குறித்துத் தாயிடம் சிறுமி முறையிட்டபோதும், நடராஜ் குடும்பச் செலவுக்குக் கூடுதல் பணம் கொடுத்ததாலும், தாய்க்கு கடுமையான குடிப்பழக்கம் இருந்ததாலும் அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. பயத்தின் உச்சத்திலிருந்த சிறுமி வீட்டை விட்டு ஓடிய நிலையில், குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன்பானு தலைமையிலான காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, வளர்ப்புத் தந்தை நடராஜ் மற்றும் தாய் ராணி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்