“முதுகில் குத்திவிட்டார்கள்” யாருமே அப்பாவை வந்து பாக்கல… தவெகவில் இணைந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் – அதிமுக மீது பகிரங்க புகார்..!!

Spread the love

அதிமுக முன்னாள் சபாநாயகரும், தற்போதைய அவிநாசி தொகுதி எம்எல்ஏ-வுமான பி. தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், இன்று (பிப். 21) அதிகாரப்பூர்வமாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். முன்னதாக அதிமுகவின் ஐடி பிரிவு அவிநாசி தொகுதி பொறுப்பாளராகவும், எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராகவும் பணியாற்றி வந்த அவர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது தந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அவிநாசி தொகுதியில் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு அளித்திருந்தார்.

கட்சியில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ், அதிமுக தலைமை மீது கடுமையான புகார்களை முன்வைத்தார். தனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது கட்சியில் இருந்து ஒருவர்கூட வந்து பார்க்கவில்லை என்றும், அதிமுக தற்போது அடித்தட்டு மக்களின் ஆதரவை இழந்துவிட்டதாகவும் அவர் வேதனையோடு தெரிவித்தார். மேலும், கடந்த 2024 மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டபோது தான் கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் கட்சியின் சில நடவடிக்கைகளால் “முதுகில் குத்தப்பட்டதாக” அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த அதிரடி மாற்றம் அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

8 minutes ago

ஐயோ… என்னது இது?… ரயிலில் பயணியின் உணவில்… கிடந்த உலோகத் துண்டு… ஊழியர் கொடுத்த விளக்கம்… IRCTC-யின் அதிரடி ஆக்‌ஷன்…!

குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…

12 minutes ago

திக் திக் நிமிடங்கள்… எதுவுமே வேலை செய்யல?… ரயில் விபத்திற்கு நொடிக்கு முன் இன்ஜின் அறையில்… ஓட்டுநர் கதறிய பகீர் வீடியோ… இணையத்தில் வைரல்…!

அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…

23 minutes ago

அதிர்ச்சி… 150 கோடியை நெருங்கும் இந்திய மக்கள் தொகை… வைரலாகும் டெல்லி AIIMS டிஜிட்டல் பலகை…!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

36 minutes ago

காரை நிறுத்தச் சொன்ன காவலரை 200 மீட்டர் தூரம் பறக்கவிட்ட ஓட்டுநர்….. மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…

43 minutes ago

“ஐயோ சாவு இப்படியா வரணும்?”…. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்த நாட்டிய கனவு… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஷாக்கிங் வீடியோ….!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…

47 minutes ago