சற்றுமுன் அதிர்ச்சி…. முன்னாள் சபாநாயகர் ப.தனபால் மருத்துவமனையில் திடீர் அனுமதி…. தற்போதைய நிலை என்ன….?

By Nanthini on ஐப்பசி 17, 2026

Spread the love

அதிமுகவின் மூத்த தலைவரும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான ப.தனபால், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த அவருக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதோடு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனைக் கவனித்த குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ப.தனபாலுக்கு, சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் தொடர் பரிசோதனைகளை மேற்கொண்டு உரிய சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். மருத்துவமனை வட்டாரங்களின் தகவல்படி, அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், காய்ச்சல் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தத் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. எனினும், முழுமையான உடல்நலக் கண்காணிப்புக்காக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

முன்னாள் சபாநாயகர் ப.தனபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்களும், தொண்டர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நேரில் சென்றும் தங்களது நல்வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.