அதிமுகவுடன் கூட்டணி…. இரவோடு இரவாக இபிஎஸ்-க்கு இன்பதிர்ச்சி கொடுத்த முக்கிய புள்ளி…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்..!

Spread the love

விழுப்புரம் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கியத் தூணாக விளங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி வெ.ஏழுமலை, அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ நேரில் சந்தித்த அவர், மலர்க்கொத்து வழங்கி தன்னை மீண்டும் தாய்க்கழகத்தில் இணைத்துக் கொண்டார். ஓ.பி.எஸ்-ன் ‘அதிமுக உரிமை மீட்புக் குழுவின்’ விழுப்புரம் மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டு வந்த ஏழுமலையின் இந்த திடீர் மாற்றம், அந்த மாவட்டத்தில் ஓ.பி.எஸ் அணிக்குப் பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், செஞ்சி ஏழுமலையின் இந்த முடிவு வட மாவட்டங்களில் அதிமுகவின் கரத்தை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. “கட்சியின் ஒற்றுமை மற்றும் வலிமைக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என தனது இணைப்பு குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே ஓ.பி.எஸ் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு முக்கிய முகம் இபிஎஸ் பக்கம் சாய்ந்திருப்பது தமிழக அரசியலில் உற்றுநோக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

59 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

1 மணத்தியாலம் ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

1 மணத்தியாலம் ago