TVK-வில் இணைந்த 7 நாட்களில் திடீர் விலகல்… எடப்பாடி முன் மீண்டும் ஓடிவந்த முன்னாள் எல்.எல்.ஏ…. செம ஷாக்கில் விஜய்….!

By Nanthini on ஆவணி 15, 2026

Spread the love

முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஒரே வாரத்திற்குள் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த முடிவை திரும்பப் பெற்று மீண்டும் அதிமுகவிலேயே இணைந்துள்ளார்.

2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் எம்.எல்.ஏ-வாகத் தேர்வான இவருக்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு மறுத்ததால் தவெக பக்கம் சென்றார். எனினும், அங்கு நிலவிய அதிருப்தி காரணமாக உடனடியாக விலகல் அறிவிப்பை வெளியிட்ட அவர், தற்போது மீண்டும் அதிமுக முகாமுக்கே திரும்பியுள்ளது தர்மபுரி மாவட்ட மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.