காலையிலேயே பரபரப்பு…. அரசியலில் மீண்டும் ஒரு ட்விஸ்ட்?… வெல்லமண்டி நடராஜன் சொன்ன ஷாக் நியூஸ்…..!

By Nanthini on தை 22, 2026

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தான் திமுகவில் இணையப் போவதாகப் பரவி வரும் செய்திகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும், சில ஊடகங்களிலும் தான் கட்சி மாறப்போவதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும், அவை திட்டமிட்டே பரப்பப்படும் வதந்திகள் என்றும் விளக்கமளித்தார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காட்டிய வழியில், தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் தான் தொடர்ந்து விசுவாசத்துடன் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். தன் மீதான அரசியல் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அதிமுகவில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் சேரும் எண்ணம் தமக்குக் கனவிலும் இல்லை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.