முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளியுமான தோப்பு வெங்கடாசலம் திமுகவிலிருந்து விலகுவதாக முறைப்படி அறிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராகப் பணியாற்றிய இவர், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இருப்பினும், ஈரோடு மாவட்ட திமுகவில் மற்றொரு முன்னாள் அமைச்சரான முத்துசாமிக்கும் தோப்பு வெங்கடாசலத்திற்கும் இடையே கட்சிப் பணிகளில் பல்வேறு கருத்து வேறுபாடுகளும் உரசல்களும் நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, சமீபத்தில் அவரது கட்சிப் பொறுப்புகளையும் திமுக தலைமை பறித்தது. இதனிடையே கட்சி விலகல் குறித்த தனது முடிவை அவர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால், விரைவில் அவர் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…