தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் சென்னை பனையூரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். இதில் குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலகங்கா, இளவரசன், வனரோஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு. ரவி ஆகியோரும், திமுக தரப்பிலிருந்து பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகேசனும், பாஜகவிலிருந்து நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரியும் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர்.
