பரபரப்பு..! “அதிமுகவை தொட்ட நீ கெட்ட” விஜய்யை ஒருமையில் பேசி எச்சரிக்கை விடுத்த EX அமைச்சர் ஜெயக்குமார்..!!

By Soundarya on மாசி 3, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அதிமுகவை விமர்சித்துப் பேசியதற்கு அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் திரைப்படச் சம்பள விவரங்களைக் குறிப்பிட்டு, அதில் எவ்வளவு கருப்புப் பணம் மற்றும் வெள்ளைப் பணம் உள்ளது என்பதை அவரால் வெளிப்படையாகச் சொல்ல முடியுமா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், விஜய் முன்பு செய்ததாகக் கூறப்படும் வரி ஏய்ப்புச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய ஜெயக்குமார், அத்தகைய செயல்கள் சமூகத்திற்கு இழைக்கப்படும் தீங்கு இல்லையா என்று விஜய்யை ஒருமையில் கடுமையாகச் சாடினார்.

அதிமுக போன்ற வலுவான பேரியக்கத்தைத் தொட்டவர்கள் யாரும் உருப்பட்டதாகச் சரித்திரமே இல்லை என்று ஆவேசப்பட்ட ஜெயக்குமார், “அதிமுகவை தொட்ட நீ கெட்ட” என எச்சரிக்கை விடுத்தார். விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது விமர்சனங்கள் குறித்துத் தொடர்ந்து காரசாரமான கருத்துகளை முன்வைத்து வரும் ஜெயக்குமார், நடிகர் விஜய் இன்னும் முதிர்ச்சியடையாத அரசியலை மேற்கொள்வதாகவும், அவரது கட்சி முளைத்து மூன்று இலை கூட விடவில்லை என்றும் எள்ளி நகையாடினார். இந்த மோதல் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையேயான அரசியல் மோதலை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.