கேரள எல்லையில் அமைந்துள்ள விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மூன்று முறை எம்.எல்.ஏ-வாக வென்ற விஜயதரணி, தனது பதவிக்காலம் முடியும் முன்பே அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததோடு தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் டி.டி. பிரவீன், பாஜக சார்பில் விஜயதரணி, நாதக சார்பில் மரிய ஸ்டெல்லா, தவெக சார்பில் மைக்கேல் குமார் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் களத்தில் பாரம்பரிய காங்கிரஸ் வாக்குகள் பெரும்பாலும் கை சின்னத்திற்கே சென்ற வேளையில், திடீரென கட்சி மாறியதால் உள்ளூர் மக்களிடையே விஜயதரணியின் செல்வாக்கு சரிந்தது.
மேலும், பாஜக நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்காத அதிருப்தியில் அவர் இருந்த சூழலில், பாஜக வாக்குகளை தவெக அதிகளவில் கைப்பற்றியது. பாஜகவில் தனக்கு எந்தப் பதவியும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்த விஜயதரணி, தற்போது அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளார். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற அவர், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். விஜயதரணியுடன் இணைந்து அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலகங்கா, வனரோஜா, இளவரசன் மற்றும் அதிமுக, அமமுவைச் சேர்ந்த பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…