சோகம்..! அப்துல் கலாமோடு பணியாற்றிய “இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி” நெல்லை முத்து காலமானார்..!

By Soundarya on ஆனி 16, 2025

Spread the love

அப்துல் கலாம் உடன் பணியாற்றிய இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்.  இவரது உடல் மதுரையில் உள்ள அவரது மகளின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள் கட்டுரைகளையும் நெல்லை முத்து எழுதியுள்ளார்.

இவருடைய நான்கு புத்தகங்களுக்கு தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது கிடைத்தது. இந்த நிலையில் இவருடைய மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பலரும் இவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.