பெரும் சோகம்..! திமுக முன்னாள் MLA சி.சின்னசாமி காலமானார்.. மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

By Soundarya on ஆனி 15, 2026

Spread the love

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரான சி.சின்னசாமி (73), உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், பேர்ணாம்பட்டு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கட்சியின் மிக முக்கிய மற்றும் செல்வாக்குமிக்க முகமாகத் திகழ்ந்தார். அவரது மறைவுச் செய்தி வேலூர் மாவட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சின்னசாமி அவர்கள் தனது தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தேவைகளுக்காகவும் சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியவர் எனக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் தனது ஆறுதலையும் அவர் தெரிவித்துள்ளார்.