வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த வருடம் மாணவர் போராட்டத்தின் போது படுகொலைகளை தடுக்க தவறிய குற்றத்துக்காக முன்னாள் பிரதமர் ஹசீனா, உள்துறை அமைச்சர் அசாதுஸமான் கான் கமால், முன்னாள் போலீஸ் ஐஜி சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
