அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த கேப்ரியல் பெரெஸ் என்ற முன்னாள் விமானப்படை கேப்டன், இணையதளத்தில் 14 வயதுச் சிறுமியாக நடித்துச் செயல்பட்ட ரகசிய அதிகாரியிடம் பாலியல் ஆசையை வெளிப்படுத்தி, தன் ஆபாசப் படத்தையும் அனுப்பியுள்ளார். பின்னர் அச்சிறுமியை நேரில் சந்திப்பதற்காக ஆணுறைகளுடன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது, அங்கு மறைந்திருந்த காவல்துறையினரால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.
கேம்டன் நீதிமன்றத்தில் ஐந்து நாட்கள் நடைபெற்ற வழக்கின் முடிவில், நடுவர் குழு அவரைப் பாலியல் குற்றவாளியாக அறிவித்தது. இவருக்குக் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலும், சுமார் ரூ.4.3 கோடி அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. சிறுவர்களைக் குறிவைத்து இணையத்தில் நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க ரகசிய அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
