அதிர்ச்சியில் EPS..! தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் எம்பி…? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!

By Soundarya on கார்த்திகை 25, 2025

Spread the love

2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியானது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும் தங்களோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம் என்றும் விஜய் கூறியுள்ளார். இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமியுடன் தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018 ஆம் வருடத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இவர்,எடப்பாடி பழனிசாமியை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். 1984-ல் எம்ஜிஆரின் ஆட்சியில் காங்கேயம் தொகுதியில் MLA ஆக  இருந்த இவருக்கு இன்றளவும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு உள்ளது. அதனால், அவரை கட்சியில் இணைக்க TVK  தரப்பு முயல்வதாக கூறப்படுகிறது.