தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ சரவணன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த மூன்று முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்ட நிலையில், தற்போது சரவணனும் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, ஆதவ் அர்ஜுனாவை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசிய சரவணன், அதனைத் தொடர்ந்து தவெகவின் முக்கிய பொறுப்பில் உள்ள அமைச்சர் N.ஆனந்த்தை சந்தித்து அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தார்; அண்மையில் நடந்த இந்தத் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
