BREAKING: திடீர் திருப்பம்… அதிமுக EX MLA தவெகவில் இணைந்தார்… காலையிலேயே இபிஎஸ்-க்கு அதிர்ச்சி….!

By Nanthini on வைகாசி 18, 2026

Spread the love

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான திருப்போரூர் தண்டபாணி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் நேற்றிரவு அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய இவர், அதிமுக நகர்மன்றத் தலைவர் மற்றும் அமமுக செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்த அனுபவம் கொண்டவர்.

அண்மைக் காலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ள நிலையில், இதுவரை எடப்பாடி பழனிசாமி (EPS) தரப்புக்குத் தனது ஆதரவை வழங்கி வந்த தண்டபாணி, தற்போது திடீரென தவெகவில் இணைந்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.