திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் அதிமுக, பாமக, பாஜக மற்றும் தவெக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 4,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த விழாவிற்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி, கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றார். திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்த மாபெரும் இணைப்பு நிகழ்வு நடைபெற்றதாக விழாவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு அமைச்சர் சால்வை அணிவித்து முறைப்படி கட்சியில் வரவேற்றார். திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுகவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த இணைப்பு விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
