மூன்றாவது முறையாக மோதும் மாஜிக்கள்… ஆயிரம் விளக்கு & அண்ணா நகரில் அதிமுக போட்ட மாஸ்டர் பிளான்.. வெற்றி யாருக்கு..?

By Soundarya on பங்குனி 29, 2026

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர்களான வளர்மதி மற்றும் கோகுல இந்திரா ஆகியோர், வரும் தேர்தலில் முறையே ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணா நகர் தொகுதிகளில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகின்றனர். இதற்கு முன்னதாக, இவர்கள் இருவரும் அந்தந்தத் தொகுதிகளில் தலா ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வளர்மதி ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை மீண்டும் தனது பழைய தொகுதியான ஆயிரம் விளக்கிற்குத் திரும்பியுள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தங்களுக்குப் பரிச்சயமான தொகுதிகளில் களமிறங்கும் இந்த முன்னாள் அமைச்சர்களின் தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.