BREAKING: சற்றுமுன் திமுகவில் இணைந்தார்.. இபிஎஸ்-க்கு பயங்கர அதிர்ச்சி….!

By Nanthini on மாசி 14, 2026

Spread the love

அதிமுகவில் இருந்து விலகிய சில மணிநேரங்களிலேயே முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீல் திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோலார்பேட்டையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் முறைப்படி தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

சமீபத்தில் அன்வர் ராஜா திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மற்றொரு முக்கிய முன்னாள் அமைச்சரும் அதிமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் தஞ்சமடைந்திருப்பது, எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒரு மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியாகவும், அக்கட்சியின் சிறுபான்மையினர் வாக்கு வங்கியில் ஏற்படும் சரிவாகவும் பார்க்கப்படுகிறது.