ஹரியானாவின் குர்கானில் வசிக்கும் வெளிநாட்டினர் குழு ஒன்று தூய்மைப் பணிகளை மேற்கொண்டது, இது நகராட்சிக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. இதுகுறித்து வெளியான வைரல் வீடியோவில், பல வெளிநாட்டினர் வடிகால்களை சுத்தம் செய்யும் போது தெருக்களில் இருந்து குப்பைகளை எடுப்பதைக் காணலாம்.
#WATCH | Gurugram, Haryana | Participating in a cleanliness drive in Gurugram, Matilda, a foreign national from France, said, "India is amazing. I love this country. But it is very sad that sometimes there is a lot of garbage everywhere…" (24.08) https://t.co/wvD40zvkoE pic.twitter.com/Q8Kg1eZjwz
— ANI (@ANI) August 25, 2025
மேலும் என் குருகிராம் என் பெருமை, என் பொறுப்பு”, “உங்கள் தெரு, உங்கள் பொறுப்பு. குப்பை வேண்டாம், அதிக மரங்கள்” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை அவர்கள் ஏந்தியிருப்பதையும் வீடியோ காட்டுகிறது . ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் ஒரு பிரெஞ்சு நாட்டவர் பேசுகையில், “இந்தியா அற்புதமானது. நான் இந்த நாட்டை நேசிக்கிறேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, சில நேரங்களில் எல்லா இடங்களிலும் நிறைய குப்பைகள் இருக்கும்” என்று கூறினார்.
&
#WATCH | Haryana | Foreign nationals living in Gurugram, along with locals, organised a cleanliness drive to clean the roads and drains in Gurugram. (24. 08) pic.twitter.com/3zKvRz7uIs
— ANI (@ANI) August 25, 2025
nbsp;
இந்த வீடியோக்கள் பார்த்த இணைய பயனர்கள் “இந்திய அரசாங்கத்திற்கும், சாலையோரத்தில் குப்பைகளை வீசும் ஒவ்வொரு இந்தியருக்கும் வெட்கமாக இருக்கிறது” என்று ஒரு பயனர் எழுதினார். “இது அரசாங்கத்திற்கும் நகராட்சிக்கும் சங்கடமாக இருக்கிறது” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார்.இது உண்மையில் எங்கள் முகத்தில் அறைந்த அடி. இந்தியர்கள் இதைச் செய்ய வேண்டும்,” என்று மூன்றாவது பயனர் பதிலளித்தார். “இதை விட வெட்கக்கேடானது எதுவும் இருக்க முடியாது,” என்று நான்காவது பயனர் கூறினார்.
