எல்லை மீறி போயிடுச்சா?… “ரிசர்வ் பண்ண சீட்லயே உட்கார முடியல!”… வெளிநாட்டுப் பெண் கிளப்பிய புயல்… சப்போர்ட் பண்ணும் இந்தியர்கள்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Gayathri on ஐப்பசி 14, 2026

Spread the love

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் வழக்கமாக நாட்டின் உபசரிப்பையும் கலாச்சாரத்தையும் பாராட்டி பதிவிடுவது வழக்கம். இருப்பினும், மியா நிகோலே என்ற வெளிநாட்டுப் பெண் பயணி ஒருவர், வட இந்திய ரயிலில் பயணம் செய்ய முற்பட்டபோது தனக்கு ஏற்பட்ட சிரமங்களையும் கூட்ட நெரிசலையும் வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். ரயில் புறப்பட சில நிமிடங்களே இருந்த சூழலில், அதிக நெரிசல் காரணமாகத் தனது பெட்டியைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் அவதியுற்றதை அந்த வீடியோவில் அவர் காட்டியிருந்தார்.

இந்தப் பதிவு இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், பல இந்திய நெட்டிசன்கள் இதற்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சமூக வலைத்தளங்களில் பார்வைகளையும் கவனத்தையும் ஈர்ப்பதற்காகவே திட்டமிட்டு இதுபோன்று சித்தரிப்பதாகக் குற்றம்சாட்டிய அவர்கள், சொகுசான பயணம் தேவைப்பட்டால் ‘வந்தே பாரத்’ அல்லது முதல் வகுப்பு ரயில்களைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும், மிகக் குறைந்த கட்டணப் பெட்டிகளில் ஏறிவிட்டு சொகுசு வசதிகளை எதிர்பார்ப்பது தவறானது என்றும் விமர்சித்தனர்.

   

அதேசமயம், மற்றொரு தரப்பு நெட்டிசன்கள் அந்தப் பயணியின் நிலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். குறிப்பாக வட இந்தியப் பாதைகளில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில்கூட கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருப்பதாகவும், முன்பதிவு செய்த பயணிகளுக்கே இருக்கை கிடைப்பதில் குழப்பங்கள் ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதன்மூலம் இந்த விவகாரம் ரயில்வே நிர்வாகத்தின் தற்போதைய கள எதார்த்தம் குறித்த விவாதமாகவும் மாறியுள்ளது.