இன்றைய சினிமாவுல இந்த மாதிரி ஆளுங்களுக்கு தான் சான்ஸ் கொடுக்குறாங்க… காட்டமாக பேசிய நடிகர் லிவிங்ஸ்டன்…

By admin on ஐப்பசி 3, 2024

Spread the love

லிவிங்ஸ்டன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் வார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் லிவிங்ஸ்டன். இயக்குனர் ஜி எம் குமாருடன் இணைந்து கன்னி ராசி மற்றும் காக்கி சட்டை ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதி தனது சினிமா பயணத்தை தொடங்கினார் லிவிங்ஸ்டன்.

   

1988 ஆம் ஆண்டு பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லிவிங்ஸ்டன். அடுத்ததாக சுந்தர புருஷன், சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம், என் புருஷன் குழந்தை மாதிரி, எங்களுக்கும் காலம் வரும் போன்ற அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் லிவிங்ஸ்டன்.

   

1990களின் பிற்பகுதிகளும் 2000-களின் முற்பகுதியிலும் புகழின் உச்சியில் இருந்தார் லிவிங்ஸ்டன். அந்த நேரத்தில் ரஜினி கமல் விஜய் ஆகியோருக்கு இணையாக போற்றப்பட்டவர் லிவிங்ஸ்டன். பூமகள் ஊர்வலம் இவர் நடித்ததில் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. 2000களின் பிற்பகுதியில் துணை நடிகராக குணச்சித்திர நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தார்.

 

பிரியமான தோழி, வேங்கை, அயோத்தி, சிவாஜி, லால் சலாம் போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பார் லிவிங்ஸ்டன். தற்போது இவரது மகள் ஜோவிட்டா லிவிங்ஸ்டன் சின்னத்திரை தொலைக்காட்சியில் முக்கியமான தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட லிவிங்ஸ்டன் தற்போதைய சினிமா பற்றி பேசி இருக்கிறார்.

லிவிங்ஸ்டன் கூறியது என்னவென்றால், இன்றைய சினிமாவில் திறமைக்கும் அனுபவத்திற்கும் மரியாதையே இல்லை. லேட்டஸ்ட்டா நீ என்ன பண்ணி இருக்க ட்ரெண்ட்ல நீ எப்படி இருக்க அப்படின்னு பார்த்து அந்த ஆளுங்களுக்கு தான் சான்ஸ் கொடுக்கிறார்கள். நமக்கெல்லாம் யாரும் கொடுக்கிறது இல்லை என்று காட்டமாக பேசி இருக்கிறார் லிவிங்ஸ்டன்.