போடு ரகிட ரகிட…. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுக்கும்….. இரவோடு இரவாக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி….!

By Nanthini on கார்த்திகை 5, 2026

Spread the love

வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில், கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார். பண்டிகைக் காலத்தில் ரேஷன் கடைகளில் எவ்வித தட்டுப்பாடும் இன்றி குடும்பங்களுக்குப் பொருள்கள் சென்று சேர்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் முழுமையாகப் பிரிக்கப்பட்டு ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் நெரிசலின்றிப் பொருள்களைப் பெற்றுச் செல்லத் தேவையான வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவதில் ஏதேனும் சிரமங்களோ அல்லது புகார்களோ இருந்தால், பொதுமக்கள் உடனடியாகக் கட்டணமில்லா இலவச உதவி மைய எண்ணான 1967-ஐத் தொடர்பு கொண்டு தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.