மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து வீரர் மத்தேயஸ் குன்ஹா தனது ரசிகர் ஒருவரின் சட்டையில் கையொப்பமிட்ட பிறகு, அவரிடமே பேனாவைக் கேட்ட சுவாரசியமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கையொப்பமிட்ட பிறகு ரசிகரிடம் திரும்பிய குன்ஹா, “சகோதரரே, இந்தப் பேனாவை எனக்குக் கொடுக்க முடியுமா?” என்று பணிவுடன் கேட்டார். அதற்கு அந்த ரசிகரும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்து பேனாவை அவரிடமே கொடுத்துவிட்டார்.
https://www.instagram.com/reel/DfzUjAIDV2N/?utm_source=ig_web_button_share_sheet
பிரேசில் நாட்டைச் சேர்ந்த முன்கள வீரரான குன்ஹா, கடந்த 2025 ஜூன் மாதம் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். ரசிகரிடம் இயல்பாகவும் எளிமையாகவும் நடந்துகொண்ட இவரது செயல் இணையத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
