kids

குழந்தைகள் ஆரோக்கியமாக புத்திசாலியாக வளர வேண்டுமா…? இந்த உணவுகளை தவறாமல் கொடுங்க…

By admin on ஐப்பசி 22, 2024

Spread the love

குழந்தைகள் தான் நம் நாட்டிற்கும் வீட்டிற்கும் உடைய செல்வங்கள். அவர்களை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கி இந்த சமூகத்திற்கு கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இன்றைய காலத்தில் ஃபாஸ்ட் ஃபுட்டுகள் அதிகமாகி விட்டதால் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே பல பிரச்சனைகள் நோய்கள் ஏற்படுகிறது. குழந்தைகள் ஆரோக்கியமாகவும், புத்திசாலித்தனமாக வளரவும் எந்தெந்த உணவுகளை கொடுக்கலாம் என்பதை பற்றி இனி காண்போம்.

   

ம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்றால் முதலில் விளம்பரப்படுத்தப்படும் நூடுல்ஸ் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதுவே பாதி பிரச்சனை வராமல் சரியாகும். இது தவிர ராகி கூழ் சிறுதானியங்களை சேர்த்து செய்த இட்லி தோசை வகைகள் அதிகப்படியான பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை கொடுப்பதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

   

அடுத்ததாக குழந்தைகள் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருப்பதற்கு நன்றாக அவர்களை விளையாட வைக்க வேண்டும். இப்போதே பெற்றோர்கள் போனை கொடுத்து குழந்தையை வீட்டிற்குள் வைத்து விடுகிறார்கள். அப்படி அதிகப்படியாக அவர்களுக்கு போனை பார்க்க கொடுக்கக் கூடாது. அதை விடுத்து அவர்களுக்கு வித்தியாசமான ஆக்டிவிட்டி கொடுப்பது வெளியில் கூட்டி சென்று அவர்கள் நன்றாக ஓடி ஆடி விளையாட வேண்டும். அப்போதுதான் அவர்கள் சுறுசுறுப்பாகவும் அவர்கள் உடல் உறுப்புகள் வளர்ச்சி அடையவும் அது உதவும்.

 

குழந்தைகள் புத்திசாலித்தனமாக வளர வேண்டும் என்றால் இளம் வயதிலேயே அவர்களுக்கு நல்ல உணவு பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். கீரைகளில் போலேட் நிறைந்துள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்களை கொண்டிருப்பதால் இது அவர்களை புத்திசாலியாக வளர வைக்கும். வால்நட், மீன் வகைகள், கிட்னி பீன்ஸ், முட்டை ஆகிய உணவுகளை கொடுக்கும் போது அவர்கள் மூளை வளர்ச்சி அடைந்து அவர்கள் புத்திசாலியாகவும் ஆரோக்கியமாகவும் வளருவார்கள்.