ரூ.634 கோடி முறைகேடு புகாரில் சிக்கிய கே.என். நேரு…. அன்பில் மகேஸைத் தொடர்ந்து அடுத்த அதிரடி கைது…. காலையிலேயே பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 31, 2026

Spread the love

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கே.என். நேருவும் கைது செய்யப்படலாம் என்ற அரசியல் வட்டாரங்களின் தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 634 கோடி ரூபாய் முறைகேடு புகாரின் அடிப்படையில், அவர் உட்பட எட்டு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதே இந்தச் பரபரப்புக்குக் காரணமாகும். அரசுப் பணிகளில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த விவகாரம், எதிர்க்கட்சிகளிடையே மட்டுமின்றி, ஆளும் கட்சியினரிடேயும் கடும் விவாதங்களை எழுப்பியுள்ளது.

இதற்கிடையில், வரவிருக்கும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, திருச்சியின் முக்கிய திமுக முகங்களும் அவர்களின் செல்வாக்கும் குறிவைக்கப்பட்டு திட்டமிட்டே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. தேர்தல் களத்தில் திமுகவின் பலத்தை குலைப்பதற்காகவே இந்தச் சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக திமுக தரப்பு குற்றசாட்டுகளை முன்வைக்கிறது. இத்தகைய சூழலில், அடுத்தடுத்து எழக்கூடிய அரசியல் திருப்பங்களும், சட்டப்பூர்வ நகர்வுகளும் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.