flying naked

இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் Flying Naked அம்சம்… அட இப்படி ஒரு விஷயம் இருக்கா…!

By admin on மார்கழி 18, 2024

Spread the love

இணையத்தில் தற்போது பல விஷயங்கள் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு விஷயங்கள் டிரெண்டாகி கொண்டிருக்கும். அதில் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருவது Flying Naked என்ற ஒரு அம்சம். இந்த Flying Naked என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அர்த்தமாக கூறப்படுவது நிர்வாணமாக பப்பது அல்லது ஆடை இல்லாமல் பயணம் செய்வது என்பது பொருள்படும். ஆனால் இந்த வார்த்தைக்கு அது அர்த்தம் கிடையாது. இதன் உண்மையான அர்த்தம் என்ன எதனால் இது ட்ரெண்டிங் ஆகிறது என்பதைப் பற்றி இனி காண்போம்.

   

Flying Naked என்பது விமானத்தில் ஒரு பயணி தனது பயணத்தின் போது கொண்டு செல்லப்படும் குறைந்தபட்ச உடமைகளை தான் இந்த வார்த்தை குறிக்கிறது. இது இணையத்தில் இந்த லைப் ஸ்டைல் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விமான பயணிகள் மத்தியில்தான் இந்த Flying Naked என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

   

இந்த Flying Naked லைஃப் ஸ்டைல் ஏன் டிரெண்டிங் ஆகி வருகிறது என்றால் கடந்த ஆண்டு மட்டும் லக்கேஜ் வகைக்காக விமான நிறுவனங்கள் சுமார் 300 கோடி வரை ட்டணம் வசூலித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த Flying Naked ட்ரெண்டிங் நோக்கம் பயணிகள் தங்களது பயணத்தின் போது அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்லாமல் குறைவான பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை வற்புறுத்தும் வகையில் இருக்கிறது.

 

இந்த Flying Naked ரெண்டில் மூன்று வகைகள் இருக்கிறது. முதலாவது வகை Totally Bare என்பதாகும். இதில் பயணிகள் போன் சார்ஜர் ஆகியவற்றை மட்டுமே கொண்டு செல்லக்கூடியவர்கள். இரண்டாவது வகையை Pocket People என்று அழைக்கிறார்கள். இவர்கள் Totally Bare பயணிகளுடன் தங்களுக்கு தேவையான துணிகள் அத்தியாவசிய பொருட்களை பயணத்தின் போது கொண்டு செல்லக்கூடியவர்கள். மூன்றாம் வகையினரை Delivery Crew என்று அழைக்கிறார்கள். இவர்கள் மிக அதிகமான பொருட்களுடன் பயணம் செய்பவர்கள் ஆவர்.

இந்த Totally Bare ஆக செல்பவர்கள் தங்களது உடைமைகளுக்கு எந்தவித கட்டணமும் ங்கேயும் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. ஆனால் அதிகப்படியான லக்கேஜ்களை கொண்டு செல்லும் போது விமான நிறுவனங்கள் அதற்கான குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கின்றது. அதனால் இந்த செலவை குறைக்கும் விதமாகவே இந்த Flying Naked தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.