மோன்தா புயல் எதிரொலி: சென்னைக்கு வர இருந்த விமானங்கள் ரத்து… சற்றுமுன் அறிவிப்பு…!!

By Soundarya on ஐப்பசி 28, 2025

Spread the love

தற்போது மொன்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக  இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து 420 கிமீ தூரத்தில் உள்ள இந்த புயலானது வடக்கு நோக்கி மணிக்கு 17 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆந்திராவின் காக்கிநாடா அருகே இன்று மாலை கரையை கடக்கும்போது மணிக்கு 90 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும்  தெரிவித்துள்ளது.  மேலும், குமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  புயல் எதிரொலியாக ஆந்திராவில் மூன்று நகரங்களில் இருந்து இன்று சென்னைக்கு வர இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆந்திர கடலோர பகுதி வழியே செல்லும் பல ரயில்களும் தாமதமாக புறப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.