உங்க தொப்பையை குறைத்து தட்டையான வயிறு பெறணுமா?… அப்போ தினமும் இத மட்டும் குடிங்க போதும்…!

By Srimathi on ஆவணி 25, 2025

Spread the love

தொப்பை கொழுப்பு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, நமது அழகையும் குறைத்து விடும். மேலும் தொப்பையை குறைப்பதற்காக ஜிம்மிற்கு செல்ல நேரம் இல்லாத மக்கள், ஆரோக்கியமான உணவுத் திட்டத்தை பின்பற்றி, உடல் எடையை குறைக்கலாம். அதற்காக, நம் வீட்டில் சராசரியாக பயன்படுத்தும், சீரகத் தண்ணீரையோ அல்லது பெருஞ்சீரகத் தண்ணீரையோ குடிப்பது வழக்கம். ஆனால் இதில் எது தொப்பையை குறைக்கும் என்று தெரியுமா?

சீரக விதைகளில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்திருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தி, உடல் கலோரிகளை எரித்து, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. மேலும் வயிற்று உப்புசத்தை குறைத்து, உடல் எடையை குறைக்கிறது. பெருஞ்சீரக விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் பசியை கட்டுப்படுத்துவதால், அதிகம் சாப்பிடத் தோன்றாது.

   

சீராக தண்ணீர் நமது குடல் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க ஓரளவிற்கு சீரக தண்ணீர் உதவி செய்யும். குறிப்பாக தொப்பையை குறைக்க விரும்புவோர், சீரக நீரை அருந்தலாம். செரிமான பிரச்சனையை தீர்க்க பெருஞ்சீரக நீரை அருந்தலாம், விரைவாக எடை இழப்புக்கு இரண்டு பானத்தையும் மாறி மாறி அருந்தலாம்.