FLASH: CNG எரிவாயு விலை உயர்ந்தது.. வாகன ஓட்டிகளுக்கு பேரிடி..!!!

By Muthu Mani on வைகாசி 26, 2026

Spread the love

வாகன ஓட்டிகளுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில், இன்று சி.என்.ஜி. (CNG) எரிவாயுவின் விலை ஒரு கிலோவுக்கு ₹2 உயர்ந்து, தற்போது ₹93.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே, இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதால், ஒரு லிட்டர் பெட்ரோல் ₹108.01-க்கும், டீசல் ₹99.78-க்கும் விற்பனையாகி வருகிறது. இப்படி அத்தியாவசிய எரிபொருள்களின் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வதால், தினசரி வாகனங்களைப் பயன்படுத்தும் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் தங்களின் வாழ்வாதாரச் சுமை அதிகரித்து கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.