டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகை ரூ.10.. அமைச்சர் விக்னேஷ் போட்ட அதிரடி உத்தரவு… ஆடிப்போன டாஸ்மாக் ஊழியர்கள்..!!

By Soundarya on ஆனி 6, 2026

Spread the love

டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகையாக ₹10 மட்டுமே வாங்க வேண்டும் என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் அதிரடி உத்தரவிட்டுள்ளார். காலி மதுபாட்டில்களை நுகர்வோர் மீண்டும் கடையில் ஒப்படைக்கும் போது, அந்த ₹10 டெபாசிட் தொகையை முழுமையாகத் திருப்பித் தர வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் பணம் வசூலிக்கக் கூடாது என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும், விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

   

சென்னை உயர்நீதிமன்றத்தின் (ஹைகோர்ட்) உத்தரவைத் தொடர்ந்து இந்த அதிரடி எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. காலி பாட்டில்களை முறைப்படி சேகரித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.