director

எடுத்த உடனே சிக்ஸர்… முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்த தமிழ் சினிமாவின் 5 இயக்குனர்கள்…

By admin on அக்டோபர் 18, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளி வருகின்றன. நமக்கு வேண்டும் என்றால் அது பல எண்ணிக்கைகளாக தெரியலாம். ஆனால் ஒவ்வொரு படம் வெளிவரும் போதும் அந்தப் படத்தின் இயக்குனருக்கு ஸ்பெஷலாவும் தான் இருக்கும். ஏனென்றால் அவர் கடுமையான உழைப்பை போட்டு தனது மனதில் இருக்கும் கதையை உயிர்பித்து படமாக நம் கண் முன் கொண்டு வருகிறார். ஒரு சிலருக்கு படங்கள் ஹிட் ஆவதில்லை. ஆனால் ஒரு சில படங்கள் எதிர்பாராத விதமாக சூப்பர் ஹிட் ஆகிவிடும். அதுபோல தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முதல் படத்தின் மூலமாகவே ஹிட் கொடுத்த இயக்குனர்களை பற்றி இனி காண்போம்.

   

1. தமிழரசன் பச்சமுத்து

   

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ப்பர் பந்து. இந்த திரைப்படம் யாரும் எதிர்பாரா விதமாக மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது. அனைத்து மக்களும் ஒருமித்த பாராட்டுகளை இந்த படத்துக்கு தெரிவித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் தினேஷ் சுவாசிக்கா சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

 

2. ராம்குமார் பாலகிருஷ்ணன்

ஹரிஷ் கல்யாண் ந்துஜா ரவிச்சந்திரன் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் பார்க்கிங். பேஷன் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தை எழுதி இயக்கியிருந்தார் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்த படமும் நல்ல விமர்சனங்களை பெற்று ஹரிஷ் கல்யாணின் கேரியர்களும் நல்ல இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல் இந்த இயக்குனருக்கு முதல் படமே ஹிட் ஆகவும் அமைந்தது.

3. விக்னேஷ் ராஜா

சரத்குமார் அசோக் செல்வன் நிகிலா விமல் ஆகியோர் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் போர் தொழில். இந்த திரைப்படத்தை எழுதி இயக்கி இருந்தார் விக்னேஷ் ராஜா. திரில்லர் திரைப்படமான இது மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வணிகரீதியாகவும் வெற்றி பெற்று ஹிட் படமாக ஆகியிருக்கிறது.

4. மந்திரமூர்த்தி

சசிகுமார் புகழ் ஆகியோர் நடித்து கடந்தாண்டு வெளியான திரைப்படம் அயோத்தி. இந்த திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இயக்குனர் மந்திரமூர்த்தி. எளிமையான கதைக்களம் என்றாலும் ஆழமான கருத்துக்களை கொண்டிருந்ததால் அயோத்தி படம் மக்களிடத்தில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

5. கௌதம் ராமச்சந்திரன்

சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கார்க்கி. இந்த திரைப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி சினிமாவில் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று சாய்பல்லவி நடிப்பும் அபாரமாக பாராட்டப்பட்டு தேசிய விருது வழங்க வேண்டும் என்ற அளவுக்கு ஹிட்டானது. முதல் படத்தின் மூலமாகவே ஹிட்டான இயக்குனர்களில் இவரும் ஒருவர்.