நடிகையின் அம்மா காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட இயக்குனர் பாலா!

By vinoth on ஐப்பசி 18, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.

அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.

   

சேது படத்தில் நடித்த அபிதா, நான் கடவுள் படத்தில் நடித்த பூஜா, அவன் இவன் படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனனி மற்றும் மதுமிதா, பரதேசி படத்தில் நடித்த வேதிகா என யாரும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரவில்லை. இந்நிலையில்தான் அவர் இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கதாநாயகியாக நடித்த வரலட்சுமி.

   

#image_title

 

அந்த படத்தில் கடுமையான நடனம் மற்றும் சில ஆக்‌ஷன் காட்சிகளில் அவர் நடித்தார். ஒரு ஆக்‌ஷன் காட்சியில் ஆர் டி சுரேஷ் அவரை நெஞ்சில் உதைப்பது போன்ற காட்சியை எடுத்துள்ளார். அந்த காட்சியில் உண்மையாகவே சுரேஷின் கால் வரலட்சுமி மேல் பட்டுவிட மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டுள்ளார் வரலட்சுமி. பின்னர் அவருக்கு ஓய்வளித்துவிட்டு அடுத்த நாள் அந்த காட்சியை படமாக்கியுள்ளார். இத்தனை கஷ்டப்பட்டு நடித்தும் தாரை தப்பட்டை திரைப்படம் சரியாக ஓடவில்லை என்பதுதான் பெரும் துயரம்.

இதையடுத்து ஒரு விருது விழாவில் வரலட்சுமிக்கு அந்த படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்ட போது இயக்குனர் பாலா வரலட்சுமியின் அம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அப்போதுதான் அவர் இந்த சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.