“தாயுடன் கள்ளக்காதல்…” ரத்த வெள்ளத்தில் மிதந்த நபர்… மகனின் கொடூர செயல்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on மார்கழி 17, 2025

Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தனது தாயுடன் தவறான தொடர்பு வைத்திருந்த சரவணன் (55) என்பவரை, மாரீஸ்வரி என்ற பெண்ணின் மகன் பரத் தனது நண்பர்களுடன் இணைந்து வெட்டிப் படுகொலை செய்துள்ளார். பைண்டிங் தொழில் செய்து வந்த சரவணன், குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வீட்டில் வைத்துத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்துச் சிவகாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட பரத் மற்றும் அவரது நண்பர்களான பாலமுருகன், கார்த்திகைச் செல்வன் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

   

விசாரணையில், தனது தாய்க்கும் சரவணனுக்கும் இடையே இருந்த தகாத உறவு பரத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதும், அதனால் தனது நண்பர்களுடன் சேர்ந்து இக்கொலையைச் செய்ததும் உறுதி செய்யப்பட்டது. தாயின் நடத்தையால் ஏற்பட்ட அவமானமே இத்தகைய விபரீத முடிவுக்குக் காரணம் எனப் பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.