Connect with us

சூர்யா வெர்சடையில் ஆக்டர்-னு நிரூபித்த 5 படங்கள்.. பிதாமகனில் லங்காக்கட்டை உருட்டி கலக்கிய சக்தி..

CINEMA

சூர்யா வெர்சடையில் ஆக்டர்-னு நிரூபித்த 5 படங்கள்.. பிதாமகனில் லங்காக்கட்டை உருட்டி கலக்கிய சக்தி..

 

தமிழ் சினிமாவில் தற்போது டாப் 5 நடிகர்களின் ஒன்றானவர் தான் “சூர்யா”. இவர் வித்தியாசமான கதைகளில் தன்னை வித்தியாசமான முறையில் பற்பல படங்களில் நடித்த தன் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். கமல், விக்ரம் போல் இவரும் தன்னை வருத்திக் கொண்டு சினிமாவிற்காகவும் தன் ரசிகர்களுக்காகவும் பல புதுமையான விஷயங்களை படைத்து திரையரங்கிற்கு கொண்டு வந்திருக்கிறார். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இவருக்கு நடிக்கவும், பாடவும், ஆடவும் தெரியாது என்று பலரும் விமர்சித்து வந்தார்கள்.

ஆனால் பாலாவின் பிதாமகன் படம் மூலம் நடிப்பின் திறமையை வெளிக் கொண்டு வந்தார் சூர்யா. தற்போது வரை பல படங்களின் தன் சிறந்த நடிப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார். அதில் ஜெய் பீம், சூரரைப் போற்று, அஞ்சான், 24 என்று பல படங்கள் அடங்கும். தற்போது இவர் குறிப்பிட்ட படங்களுக்கு தன் முழு திறமையையும் வெளிக்கொண்டு வந்து உடலை வருத்தி நடித்த ஐந்து படங்களை தான் சற்று பார்க்க போகிறோம்.

   

2001 ஆம் ஆண்டு பாலா அவர்களின் இயக்கத்தில் சூர்யா, லைலா, மனோபாலா, சரவணன், கருணாஸ் போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் இசை கடவுள் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையில் வெளிவந்த படம் தான் “நந்தா”. இப்படத்தில் சூர்யா இதுவரையும் காட்டிராத புது விதமான நடிப்பை வெளிக்கொண்டு வந்திருப்பார்.

2004 ஆம் ஆண்டு AVM ப்ரொடக்ஷன் தயாரிப்பில் சசி சங்கர் அவர்களின் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, விவேக், மனோரம்மா, மனோபாலா ஆகிய பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம்தான் “பேரழகன்”. இப்படத்தில் சூர்யா அவர்கள் தன் உடலை வருத்தி ஊனமுற்றவர் போல் நடித்து தன் முழு திறமையும் தமிழக மக்கள் வியந்து போகும் அளவிற்கு வெளிக்கொண்டு வந்திருப்பார். இப்படத்திற்காக சூர்யா அவர்களுக்கு (state film fare award for best actor) என்று விருது வழங்கப்பட்டது.

ஏ.ஆர் முருகதாஸ் அவர்கள் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வந்த படம் தான் “கஜினி”. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின், நயன்தாரா நடித்திருப்பார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இசையமைத்துள்ளார். வில்லன்கள் சூர்யாவையும் அசினையும் கொலை முயற்சி செய்த பொழுது சூர்யா அவர்களுக்கு தலையில் அடிபட்டு மறதி நோய் ஏற்பட்டு இருக்கும், அதனால் போல ரைட் கேமரா மூலம் உடம்பில் பச்சை குத்தி வைத்து தனக்கு நடக்கும் விஷயங்களை ஞாபகப்படுத்தி வில்லன்களை பழிவாங்கும் விதமாக இப்பட கதை அமைந்திருக்கும். இதில் சூர்யா மிக தத்ரூபமாக இதுவரையிலும் யாரும் கொண்டு வராத நடிப்பை வெளிக்கொண்டு வந்திருப்பார். இதற்காக பல விருதுகள் சூர்யா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு KS ரவிக்குமார் அவர்கள் இயக்கத்தில் சூரியா அவர்கள் நடிப்பில் ஆக்சன் காமெடி டிராமா கலவையில் வெளிவந்த படம் தான் “ஆதவன்”. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நயன்தாரா, வடிவேலு, சரோஜாதேவி, ஆனந்த் பாபு என்று பிரபல பட்டாளமே நடித்திருப்பார்கள். இப்படம் மூலம் சூரியா அவர்கள் மிக கமர்சியலாக தன் அழகையும் நகைச்சுவை மிக்க உடல் மொழியை காமித்து இதுவரை இல்லாத ஒரு ஜாலியான முறையில் சூர்யா நடித்துக் காட்டி இருப்பார்.

சூரியா அவர்கள் சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று இருந்த சமயத்தில்தான், 2003 ஆம் ஆண்டு பாலா அவர்கள் இயக்கத்தில் விக்ரம், சூர்யா, சங்கீதா, ஜெயகாந்த், மனோபாலா என்று பலரும் நடித்து வெளிவந்த படம் தான் “பிதாமகன்”. இப்படம் மூலம் தான் சிறந்த நடிகர் என்று முதல் முதலில் சினிமா துறையில் தன் திறமையை ரசிகர்கள் மத்தியில் காண்பித்தார். இப்படத்தின் பின்பு தான் சூர்யாவின் சினிமா வாழ்க்கை எங்கோ சென்றது. பாலாவின் படைப்பில் நடித்த பின் தான் சூர்யா அவர்களுக்கு சீமா வாழ்க்கையே தொடங்க ஆரம்பித்தது என்றே கூறலாம்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top