“பூட்டிய வீட்டுக்குள் 5 சடலங்கள்”… கதவை உடைத்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. திடுக்கிடும் சம்பவம்….!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டத்தில், பூட்டிய வீட்டுக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌஷிக் விஹார் காலனியில் வசித்து வந்த நில அளவையாளர் அசோக் ரதி (40), அவரது மனைவி அஜந்தா (37), தாய் வித்யாவதி (70) மற்றும் மகன்கள் கார்த்திக் (16), தேவ் (13) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் அளித்த தகவலின் பேரில், போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இந்த கோர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

உயிரிழந்த ஐந்து பேரின் தலைகளிலும் மிக நெருக்கமான தூரத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஒரே அறையில் சடலமாகக் கிடந்த நிலையில், சம்பவ இடத்திலிருந்து மூன்று கைத்துப்பாக்கிகளைப் போலீசார் மீட்டுள்ளனர். தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் இருந்த மூன்று துப்பாக்கிகள் மற்றும் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்த விதம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அடபாவேமே..! என்ன நடக்கிறது?… பட்டப்பகலில் சாலையில் சுருண்டு விழுந்த வாலிபர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்… அதிர்ச்சிப் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில், கடுமையான போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆளான நபர் ஒருவர் தன் நிலை மறந்து சாலையில் நிலைதடுமாறித்…

1 மணத்தியாலம் ago

ஏற்கனவே திருமணம் ஆகிட்டா?.. ஹோட்டல் ரூமில் பிணமான புதுப்பெண்… 3 மாசத்துல முற்றுப்பெற்ற வாழ்க்கை… வங்கி மேலாளர் செய்த வெறிச்செயல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதி அறையில், திருமணமான மூன்றே மாதங்களில் முஸ்கான் சிமோலியா என்ற…

1 மணத்தியாலம் ago

“போஸ்ட் மார்ட்டம் செய்தால் தீக்குளிப்பேன்…”ஆபாச வீடியோ காட்டி சித்ரவதை… 14 வயது மகனுடன் சேர்த்து நாடகமாடிய தவெக பெண் நிர்வாகி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, குடிபோதையில் பாலியல் வீடியோக்களைக் காட்டித் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்த கணவனைக் கொடூரமான முறையில்…

1 மணத்தியாலம் ago

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது…? ரூ.100 கோடி லஞ்சப் புகார் விவகாரம்… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட லஞ்ச ஒழிப்பு வழக்கில், முன்னாள்…

1 மணத்தியாலம் ago

மூத்த தலைவர்களுடன் அதிகரித்த இடைவெளி…! உதயநிதியின் ‘அறிக்கை அரசியல்’ உத்தியால் திமுகவில் புகையும் உள்கட்சி மோதல்…! குழப்பத்தில் டோஹ்ன்டர்கள்…!

திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், கட்சியின் மூத்த தலைவர்களுடன் போதிய தொடர்பில்லாமல் விலகியிருப்பது கட்சித் தலைவர்…

1 மணத்தியாலம் ago