Connect with us

அப்பா பஸ் கண்டக்டர்.. 10-ம் வகுப்பு அப்புறம் வீட்டு பக்கமே போகல.. பலருக்கு தெரியாத லோகேஷ் கனகராஜின் மறுபக்கம்..

CINEMA

அப்பா பஸ் கண்டக்டர்.. 10-ம் வகுப்பு அப்புறம் வீட்டு பக்கமே போகல.. பலருக்கு தெரியாத லோகேஷ் கனகராஜின் மறுபக்கம்..

 

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் இளம் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தன்னுடைய சிறப்பான திறமையை வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்திருந்தார். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

   

காரணம் ஹீரோயின் எதுவும் இல்லாமல் பாடல் காட்சிகள் எதுவும் இல்லாமல் பரபரப்பான ஆக்சன் டிராமாவாக இயக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்த இரண்டு திரைப்படங்களுக்குப் பிறகு தளபதி விஜய் வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். அதைத்தொடர்ந்து நடிகர் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் 450 கோடி வசூல் செய்து சாதனை செய்தது.

தற்போது அவர் கடைசியாக மீண்டும் விஜய் அவர்களை வைத்து வியோ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது குடும்பத்தை பற்றி  பேசியிருந்தார். அதாவது லோகேஷ் கனகராஜ் அவர்களின் தந்தை ஒரு பஸ் கண்டக்டர், அம்மா ஹோம் மேக்கர்.

தான் பத்தாம் வகுப்புக்கு பிறகு பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஹாஸ்டலில் இருந்து படித்ததாகவும், அதன் பிறகு காலேஜ் ஹாஸ்டலில் படித்ததால் வீட்டுடன் எனக்கு பெரிய அளவு தொடர்பு இல்லாமல் போய்விட்டது என்று கூறினார். அது மட்டும் இல்லாமல் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனது காதலியான ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமாவின் மீது இருந்த காதல் காரணமாக வேலையை விட்டுவிட்டு திரைப்படம் இயக்கத் தொடங்கினார். லோகேஷ் கனகராஜ் இந்த நிலைமைக்கு வருவதற்கு அவரது மனைவி வேலைக்கு சென்று மிகவும் உறுதுணையாக இருந்தார் என்று கூறியிருந்தார். இந்த பேட்டியானது வைரலாகி வருகிறது

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top