கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட நினைத்தாலே இனிக்கும் படம் கடந்த 1976-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், கமலஹாசன், ஜெயப்பிரதா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. தெலுங்கில் அந்தமானிய அனுபவம் என்ற பெயரில் கடந்த 1979-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சிங்கப்பூரில் நடந்தது. முக்கியமான சிறப்பு அம்சம் என்னவென்றால் தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் 14 பாடல்கள் இடம் பெற்றது நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் தான்.
அதன் பிறகு வேறு எந்த படத்திலும் 14 பாடல்கள் இடம் பெறவில்லை. இதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தான் எழுதியுள்ளார். அதுமட்டுமில்லாமல் படத்தில் இடம்பெற்ற பெரும்பாலான பாடல்களை எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.